நதிகளை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் இன்று அதிகாலை கன்னியாகுமரியில் துவங்கி 21 கிலோ மீட்டர் தூரம் கடந்து நாகர்கோவிலில் முடிவடைந்தது.

இதில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கு காவல் துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் உயரம் தாண்டுதலில் மூன்றுமுறை தேசிய அளவில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர் ஆறுமுகம் பிள்ளை ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்


No comments:
Post a Comment