அகில இந்திய மக்கள் நலகழகம் சார்பாக கோணம் நாஞ்சில் ஓயாசிஸ் சிறப்பு பள்ளியில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் சிவக்குமார் அவர்கள் தலைமையில் விழாவானது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் கழகத்தின் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் அவர்கள் சார்பாக மாணவ மாணவிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகத்தின் மாநகர தலைவர் நாராயணன் மற்றும் அருள்செல்வன், பபிசிங் ஆகியோரும் ஓயாசிஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் ஆசியைகளும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.


No comments:
Post a Comment