18 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்றும் மோட்டார் சைக்கிள் சென்று இன்று ஆய்வு செய்தார் .கோணம் கீழ் ஆசாரிப்பள்ளம் பள்ளி விலை பெருவிலை பார்வதிபுரம் பகுதிகளில் நேர் மகேஷ் ஆய்வு செய்தார்.

அப்போது பெருவிலைப் பகுதியில் உள்ள அனந்தனார் சேனலில் ஆய்வு பணியை மேற்கொண்ட போது சானலில் முழுவதும் குப்பைகள் அதிகளவு கிடந்தது. இந்த குப்பை களை உடனடியாக அப்புறப்படுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் சேனல்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசக்கூடாது. குப்பைகளை வீசினால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி சார்பில் அந்த பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். குப்பைகள் வீசுவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பழுதான சாலைகள் மற்றும் கழிவுநீர் ஓடைகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார் .மோசமாக கிடந்த கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.


No comments:
Post a Comment