பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் ஓடை. நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 December 2022

பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் ஓடை. நேரில் சென்று பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்.


நாகர்கோவில் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மக்கள் அதிகமாக வசிக்கும் மற்றும் வாகனங்கள் அதிகமாக சென்று வரும் முக்கிய பகுதியான பறக்கின்கால் கால்வாய் பாறைக்காய் மடை, கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் ரோட்டில் உள்ளது.

 

இந்த கழிவுநீர் ஓடையானது பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஓடை இருப்பது கூட தெரியாத அளவிற்கு செடி, மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து ஓடையே தெரியாத அளவுகாணப்படுகிறது.



இதனால் கழிவு நீர் செல்ல முடியாமல் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி பலமுறை கோரிக்கைகள் வைத்த பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் பகுதியில் உள்ள இந்த கழிவு நீர் ஓடையால் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருந்து வருவதால் இன்று எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ நேரடியாக அந்த இடத்தை பார்வையிட்டார். 



தொடர்ந்து உடனடியாக கழிவுநீர் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment