கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 31 May 2023

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கும்.


கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத்திரு விழாவை யொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. காலை 8-30 மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. 


இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் விவேகானந்த கேந்திர தொழிலாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப்பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொண்டு தேர் இழுப்பதற்கு வசதியாகவும் நாளை காலை 8 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகுபோக்கு வரத்து தொடங்குவதற்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது. 


இந்த தகவலை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார். 

No comments:

Post a Comment