கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், ஜெர்மனியில் நடைபெறவுள்ள சிறப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இருக்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கூறுகையில். சிறப்பு ஒலிம்பிக் உலகளவிலான விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக விளையாட கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் பகுதியில் அமைந்துள்ள ஜோதிநிலையம் மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்புப்பள்ளி மாணவர்கள் ஆர்.லிபின், ஆர்.விவின் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
ஜெர்மனி பெர்வின் நகரில் ஜூன் 17 முதல் ஜூன் 25 வரை சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் சுமார் 190 நாடுகளிலிருந்து 7000 விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 26 வகையான போட்டிகள் நடைபெற உள்ளது. அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்காக நடத்தப்படும் இந்த சிறப்பு ஒலிம்பிக் தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டம் ஆர்.விபின், 200 மீட்டர் ஓட்டம் ஆர்.வியின் ஆகியோர் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சிறப்பு மாணவர்கள் சிறப்பு ஒலிம்பிக்ஸ் உலகளவிலான விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகளில் விளையாட தமிழகத்தில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அகமதாபாத். குஜராத் டெல்லி போன்ற இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்கள். தேசிய அளவிலான பயிற்சி முகாமில் தேர்வாகி இந்தியா சார்பாக தடகளப்போட்டியில் விளையாட உள்ளனர்.
இவ்விரண்டு வீரர்களின் பயணச்செலவுக்காக தன்னார்வலர்கள் வழங்கிய ரூ.1 இலட்சம் மதிப்பிலான காசோலையும் வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் .இரா.ரேவதி, மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவாயர் சிவசங்கரன், ஜோதிநிலையும் சிறப்புப்பள்ளி முதல்வர் அருட்சகோதரி.வின்ஸ் SABS, தன்னார்வலர்கள், .டீஜீஎன் சலீம், மரு-பெனேஷ் பென்சாம், .ஜெரோலின், சுகதேவ், .யூசிக், மாலிக் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment