கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யும் குழாயினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் திறந்து வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 June 2023

கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி செய்யும் குழாயினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அவர்கள் திறந்து வைத்தார்.

photo_2023-06-06_12-25-40

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்களிப்புடன் அரசு பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


கண்ணியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிதுக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்களை  பால்வாத்துறை அமைச்சர் த‌மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  தலைமையில் திறந்து வைத்து. தெரிவிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தினை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையிலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்கும் விதமாகவும், நீர் நிலைகளை தூர் வாரி மேம்படுத்தும் நோக்கிலும் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


குறிப்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏ.வி.எம் கால்வாய் தூர் வாருவதற்கான முன் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீரினை அதிகப்படுத்தும் வகையில் அனைத்து வீடுகளிலும், மழைநீர் சேகரிப்பு குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திட துறை சார்ந்த அலுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்களிப்புடன் ரூ.10 இலட்சம் மதிப்பில் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி, திட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி, மூலச்சல் அரசு மேல்நிலைப்பள்னி, காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொல்லங்கோடு மேல்நிலைப்பள்ளி, கருங்கள் அரசு அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறை மேல்நிலைப்பள்ளிட அம்மாண்டிவிளை அரசு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக மழைநீர் சேகரிப்பு நிலையம் மற்றும் தண்ணீரினை மறுசுழற்சி செய்யும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

மேலும் இத்திட்டம் அனைத்து பகுதிகளிலும் விரிவு படுத்திட துறை அலுவலர்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நிலத்தடி நீரினை சேகரித்து நீர் நிலைகளை உயர்த்தி முன்வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் த.தமனோ தங்கராஜ்  தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஈட்டமன்ற உறுப்பினர் .ரெ.ராஜேஷ் குமார் பத்மஞடபுரம் ஆட்சியர் .ஆர்.கௌசிக், சிறப்பு மானூட்ட வருளாய் அலுவலர் சார் .இரா.ரேவதி, கொல்லங்கோடு நகர்மன்ற தலைவர் இராணி ஸ்பன், கிள்னியூர் வட்டாட்சியர் .அனிதா குமாரி உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவயர்கள் உடன்பட பலர் கலந்து கொண்டார்கள், 

No comments:

Post a Comment