தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க. கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79000 எக்கர் நிலங்களின் பாசனத்திற்கு கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு 01.06.2023 முதல் 29.02.2024 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தேவைக்கேற்ப மற்றும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை. சிற்றார் | மற்றும் சிற்றார் அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணைப்பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அதனைதொடர்ந்து, பேச்சிப்பாறை அணையிலிருந்து இன்று கன்னியாகுமரி மாவட்ட விவசாய பெருமக்கள் முன்னிலையில் கோதையாறு வடிநில பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேலும், தற்போதைய நீர் இருப்பாக பேச்சிப்பாறை அணையில் 40.35 அடி நீர்மட்டமும். 3277.11 மில்லியன் கன அடி கொள்ளளவும். பெருஞ்சாணி அணையில் 41.50 அடி நீர்மட்டமும். 53700 மில்லியன் கன அடி கொள்ளளவும். சிற்றார் | அணையில் 10.56 அடி நீர்மட்டமும். 197.38 மில்லியன் கன அடி கொள்ளளவும். சிற்றார் - | அணையில் 10.65 அடி நீர்மட்டமும். 315.84 மில்லியன் கன அடி கொள்ளவும் நீர் இருப்பு உள்ளது.
கோதையாறு மற்றும் பட்டணங்கால் ஆயக்கட்டு விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறும் நோகத்துடன் நீர் பங்கீட்டில் நியாயமான முறையில் துறையுடன் ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை தெரிவித்தார்கள். அமைச்சர் .த.மனோ தங்கராஜ் .
இந்நிகழ்ச்சியில், கோதையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளார் பொறி.ராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் த.ஷீலா ஜண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விலாயம்) கீதா, உதவி செயற்பொறியாளர்கள் மெங்கி சதேக் திருலூயிஸ் அருள் செழியன், நீர்வளத்துறை பொறியாளர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ழைங்கறிஞர் ஜாண்சன், புலவர் செல்லப்பா, திருவின்ஸ் ஆன்றோ, -ரவி. .அருளானந்த ஜுஜூர்ஜ் கோபால், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் பாசன தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment