

போக்சோ வழக்குகளில் சிறந்த முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கன்னியாகுமரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி அவர்களுக்கும், 18 குற்றவாளிகளுக்கு நன்னடத்தை பிணை வாங்குவதில் சிறந்த முறையில் பணியாற்றிய வடசேரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் . உதயகுமாருக்கும் குண்டாஸ் வழக்குகளில் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக திருவட்டார் காவல் நிலைய ஆய்வாளர் .ஜானகிக்கும், நீதிமன்ற நடைமுறைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் சிறந்த முறையில் பணியாற்றிய இரணியல் காவல் நிலைய தலைமை காவலர் குமாருக்கும் குற்ற வழக்குகளில் சிறந்த முறையில் குற்றபத்திரிகை தாக்கல் செய்த கருங்கல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தமகேஷ்க்கும் வாட்ஸ் அப் குழுக்களில் வந்த காணாமல் போனவர் பற்றிய படத்தை வைத்து FRS செயலி மூலம் களக்காடு மாவட்டத்தை சேர்ந்த நபரை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்தமைக்காக மாவட்ட குற்ற ஆவண காப்பகம் பெண் சிறப்பு சார்பு ஆய்வாளர் மேபின் சிம்லாக்கும், மார்த்தாண்டம் காவல் நிலைய கள்ள சாராய வழக்கில் குற்றவாளியை கண்டுபிடித்து கொடுத்தற்காக மற்றும் 25 லிட்டர் கள்ளசாராயம் பறிமுதல் செய்ததற்காக* திருவட்டார் தனிபிரிவு தலைமை காவலர் ஞானரெஜி, பேச்சிப்பாறை தனிப்பிரிவு தலைமை காவலர் த ராஜாமணி, கொற்றிகோடு தனிப்பிரிவு முதல் நிலைக் காவலர் . டார்வின், மார்த்தாண்டம் காவல் நிலைய தனி பிரிவு முதல் நிலை காவலர் ராஜேஷ், பளுகல் காவல் நிலைய தனி பிரிவு முதல் நிலை காவலர் அல்போன்ஸ் தென் தாமரைகுளம் காவல் நிலைய இருசக்கர வாகனம் திருட்டு வழக்கில் குற்றவாளியை கைது செய்ய உதவியாக இருந்த* தென் தாமரைகுள தனிப்பிரிவு தலைமை காவலர் மகேஷ் 18 வருடமாக தலைமறைவாக இருந்த ஏழு வருட சிறை தண்டனை பெற்ற குற்றவாளியை கைது செய்ததற்காக திருவட்டார் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் தடேவிட் ராஜ் மற்றும் தலைமை காவலர் ஷைலின் ஜெப சுபின் மேலும் சிறந்த முறையில் பணியாற்றியதற்காக மாவட்டத்தில் உள்ள 04 அதிரடிப்படை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

No comments:
Post a Comment