மணக்குடி கால்வாயில் படகுசவாரி மேற்கொள்ளும் ஒத்திகை நிகழ்ச்சியில் - பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 10 June 2023

மணக்குடி கால்வாயில் படகுசவாரி மேற்கொள்ளும் ஒத்திகை நிகழ்ச்சியில் - பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ்.


கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடி கால்வாயில் படகுசவாரி மேற்கொள்வது குறித்து  பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்,  தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் .ரெ.மகேஷ்  முன்னிலையில்  நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தெரிவிக்கையில்:- கன்னியாகுமரி மாவட்டம், புத்தளம் பேரூராட்சிக்குட்பட்ட மணவாளபுரம் வழியாக மணக்குடி கடற்கரையில் சென்றடையும் பழையாறு கால்வாயில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தனியார் பங்களிப்புடன் படகுசவாரி மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியில் இன்று கலந்து கொள்ளப்பட்டது.


இப்படகு சவாரி பயணத்தின்போது இயற்கை சூழலை உணர முடிந்ததோடு, மனிதர்களால் உருவாக்கப்பட்ட அலையாத்திகாடுகளை காண முடிந்தது. இந்த அலையாத்தி காடுகள் அமைப்பதற்கு மறைந்த இந்துக்கல்லூரி பேராசிரியர் முனைவர்.சந்தானகுமார் அவர்கள் பேருதவியாக இருந்தார்கள் இக்காடுகள் வெள்ளப்பேரிடர்கள் தடுக்கும் அரணாக திகழ்கிறது. ராம்சார் குறியீட்டில் இப்பகுதி ஈரப்பதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வருகை தந்து, இனப்பெருக்கம் செய்வதற்காகவும், சூழியல்கேற்றவாறு பாதுகாப்பாக தங்குவதற்கு உதவி செய்கிறது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என அவர் தெரிவித்தார்.


நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பாபு. மாவட்ட சுற்றுலா அலுவலர் .தொ.சதீஸ்குமார். லெட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் .பி.எஸ்.பி.சந்திரா, உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment