கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 22 June 2023

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த டாக்டர் குழுவினருக்கு கலெக்டர் பாராட்டு.


குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் சார்லட் (வயது 52), தொழிலாளி. இவரது மகள் ஜீவிதா (31) என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறுநீரக பிரிவில் சிசிச்சைக்காக சேர்ந்தார். 

ஆஸ்பத்திரியில் அவருக்கு கடந்த 1½ ஆண்டுகளாக தொடர்ந்து ரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டு வந்தது. இதனிடையே ஜீவிதாவுக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. இந்த நிலையில் அவருக்கு இரு சிறுநீரகமும் அகற்றி அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. ஜீவிதாவிற்கு அவருடைய தாயார் சார்லட் தனது ஒரு சிறுநீரகத்தை தானமாக வழங்க முடிவு செய்தார். 


இதனைத் தொடர்ந்து கடந்த 6-ந் தேதி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் மற்றும் மருத்துவக் குழுவினர் சார்லட்டுக்கு முழு உடல் பரிசோதனையும் மற்றும் அரசின் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ குழுவில் முன் அனுமதியும் பெற்றார்கள்.


இதையடுத்து ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் டீன் பிரின்ஸ் பயஸ் தலைமையில் சூப்பிரண்டு அருள் பிரகாஷ், உறைவிட மருத்துவர் ஜோசப் சென், உதவி உறைவிட மருத்துவர்கள் விஜயலட்சுமி, ரெனிமோள் மற்றும் டாக்டர்கள் ஜெயலால், பத்மகுமார், அருண் வர்கீஸ், எட்வர்ட் ஜான்சன், செல்வகுமார் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் ஜீவிதாவிற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 


பின்னர் அவர் 15 நாட்கள் மருத்துவ குழுவினரால் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதா தற்போது நல்ல உடல் நலம் பெற்று உள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஜீவிதாவை மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நேரில் பார்த்து உடல் நலம் குறித்து விசாரித்தார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்ணுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்த ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ டாக்டர் குழு வினரை பாராட்டினார்.


அப்போது ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ் பேசியதாவது:- ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 2 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. முதலில் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. பின்னர் மருத்துவ முன் அனுமதி பெற்று அவருக்கு அவரது தாயாரின் ஒரு சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜீவிதாவிற்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. 


இதற்காக உழைத்த அனைத்து மருத்துவ குழுவினரையும் பாராட்டுகிறேன். மேலும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வினையை சீர் செய்யும் சிறப்பு மருந்துகளும், தொடர் கண்காணிப்பு சிகிச் சைக்கான பரிசோதனை களும் முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத் தின் கீழ் வழங்கப்படும். இந்த மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ10 லட்சம் வரை செலவாகும். ஆனால் இங்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நடைபெற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment