கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 12 June 2023

கன்னியாகுமரி மாவட்டத்தில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசு.

குமரி மாவட்டம், சந்தையடி அடுத்த ஈச்சன்விளை, அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ - மாணவியருக்கும், கலை மற்றும் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகுமார் தலைமை தாங்கினார்.


பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணேஷ மர்த்தாண்டன் மற்றும் கலப்பை மக்கள் இயக்க பொருளாளர் சிவராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்கம் நிறுவன தலைவர் P.T.செல்வகுமார் கலந்து கொண்டு மானவர்களுக்கு கலப்பை நற்சான்றிதழும் பரிசுத் தொகையும் வழங்கி, மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார்.மானவர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றிய போது : உலகில் வாழும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும். நாம் பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை. இறக்கும் போது எதையும் கொண்டு போவதில்லை இதை ஏராளமான கோடீஸ்வரர்கள் முதல் பலரின் இறப்பு வரை நாம் பார்த்து அறிந்திருக்கிறோம்.


ஆனால், புத்தர், இயேசு, காந்தி, அன்னை தெரசா போன்றவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழ்கிறார்கள். அவர்கள் அன்பையும் மனித நேயத்தையும் மக்கள் மனதில் விதைத்து சென்றார்கள். எனவே தான் அவர்கள் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மாணவர்கள் அனைவரும் அன்பையும் மனித நேயத்தையும் எப்போதும் கடைபிடிக்க வேண்டும். பிறருக்கு உதவி செய்தல் வேண்டும். மாணவர்களுக்கு முதலில் படிப்பு தான் முக்கியம்.


காலத்தால் செய்த உதவி சிறிது எனினும் அதனால் கிடைக்கும் பலன் பெரிதாக இருக்கும். எனவே அன்பையும் மனித நேயத்தையும் கடைபிடியுங்கள். இவ்வாறு பேசினார். கலப்பை மக்கள் இயக்க துணை செயலாளர் பாலசுந்தரம். நன்றியுரையாற்றினார். நிகழ்வில், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் செந்தில் மோகன், பள்ளியின் திறன் மேலாண்மை குழு தலைவி அம்பிகா, பேரூராட்சி உறுப்பினர்கள் பிரேம் ஆனந்த், ராகவன், முன்னாள் பேரூராட்சி தலைவி பொன் பன்னீர் செல்வி, முன்னாள் மாணவர் பால்துரை, மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment