விஷ்வ ஹிந்து பரிஷித் சார்பில் பன்றிகுளம் கரை சீரமைக்க கோரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 June 2023

விஷ்வ ஹிந்து பரிஷித் சார்பில் பன்றிகுளம் கரை சீரமைக்க கோரிக்கை.


கன்னியாகுமரி மாவட்டம்  பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட துவரங்காடு பகுதியில் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கும் கரோல் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பேர் ஆபத்தை விளைவிக்கும் வகையில் பள்ளியின் எதிரே உள்ள பன்றிகுளம் ஆனது கரை உடைந்து பல வருடங்களாக அதனை சரி செய்யாமல் உள்ளது. ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்த பிறகு தான் அதிகாரிகள் சரி செய்யும் செயலை வாடிக்கையான கொண்டுள்ளனர். 


பள்ளி விடுமுறை அளித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் சரி செய்யாமல் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர் . இதனை போர்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டி குமரி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷித் சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திக் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம்  கோரிக்கை மனு அளித்தார்கள். 

No comments:

Post a Comment