கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், கலந்தாய்வு மேற்கொண்டார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 June 2023

கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், கலந்தாய்வு மேற்கொண்டார்.

photo_2023-06-08_14-47-30

கன்னியாகுமரி மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் சார்பில் திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பது குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்; கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட ஊரக உள்ளாட்சி சார்பில் 5 உறுப்பினர்களும், நகர உள்ளாட்சி சார்பில் 7 உறுப்பினர்களும் என மொத்தம் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணை மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில் வரும் 23.06.2023 அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்தல் நடைபெறவுள்ளது.

tamilaga%20kural

share%20it%20-%20tamilagakural

அதனடிப்படையில் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இன்றைய வேட்புமனு தாக்கலில் எந்த உறுப்பினர்களும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கு திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை தேர்தல் நடத்தும் அலுவலராக மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். உதவி தேர்தல் நடத்தம் அலுவலர்களாக ஊரக உள்ளாட்சி பகுதிக்கு ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை)-ம், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிக்கு உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) மற்றும் மாநகர் நல அலுவலர்- நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.


இத்தேர்தலில் ஊரக உள்ளாட்சி பகுதிக்கு 5 உறுப்பினர்களை 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், நகர்ப்புற உள்ளாட்சி பகுதிக்கு 7 உறுப்பினர்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநகராட்சியில் உள்ள 52 மாநகராட்சி வார்டு உறுப்பினர்களும், 4 நகராட்சிகளில் உள்ள 98 நகராட்சி வார்டு உறுப்பினர்களும், 51 பேரூராட்சிகளில் உள்ள 826 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுப்பார்கள். மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 987 (11 + 976) ஆகும். இத்தேர்தலுக்கான வேட்பு மனு படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (தணிக்கை) அலுவலகம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களிலும் வழங்கப்படும். வேட்புமனு பரிசீலனைக்கு பின் தகுதியான வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 23.06.2023ல் மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை நடைபெறும். வாக்குப் பதிவு முடிவடைந்ததும் வாக்குகள் எண்ணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்.  தெரிவித்துள்ளார்.


நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன்,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, மாநகர செயற்பொறியாளர் .பாலசுப்பிரமணியம் உட்பட நகராட்சி ஆணையர்கள், ஊராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment