நாகர்கோவிலில் இன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 September 2023

நாகர்கோவிலில் இன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்.

ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அன்றைய தினமே பணப்பலன்களை வழங்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கடந்த 26-ந்தேதி முதல் ராணி தோட்டம் பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 


இன்று 3-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜ், பொன் சோபன ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் மரிய வின்சென்ட், கலா, தாமஸ், சின்னன் பிள்ளை ஆகியோர் பேசினர். ஓய்வு பெற்று பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் மாநில தலைவர் முரளிதரன், ஜே.சி.டி.யூ. மாவட்ட கன்வீனர் ராமச்சந்திரன் ஆகியோர் காத்திருப்பு போராட்டம் குறித்து பேசினர். 


வருகிற 6-ந் தேதி பேச்சுவார்த்தை நடப்பதையொட்டி காத்திருப்பு போராட்டத்தை இன்றுடன் ஒத்தி வைப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment