கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அண்ணா படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 15 September 2023

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அண்ணா படத்திற்கு தி.மு.க.வினர் மரியாதை.

பேரறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது, அகஸ்தீஸ்வரம் தி மு க  சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் பிள்ளையார் கோவில் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி மு க செயலாளர் பா.பாபு தலைமையில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 


இந்நிகழ்ச்சியில்  அவைத் தலைவர் கணேசன், மாவட்ட பிரதிநிதி பிரேம் ஆனந்த், ஜார்ஜ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி, ஒன்றிய பிரதிநிதி சுப்பிரமணியன், பேரூர் கழக பொருளாளர் லிங்கம், நிர்வாகிகள் முருகேசன், சோமு, ஞானசேகரன்,கிருஷ்ணகுமார் அஜித் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment