சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 September 2023

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து இன்று (15.09.2023) நடைபெற்றது.


நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து விசாரணை செய்து முடித்திட உதவியாக* இருந்த JM II Court Nagercoil  அரசு கூடுதல் வழக்கறிஞர் திரு. பாலகிருஷ்ண குமார் மற்றும் JM Eraniel Court அரசு வழக்கறிஞர் திருமதி. ஸ்ரீதேவி அவர்களுக்கும் நித்திரவிளை  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் தண்டனை பெற்றுத்தர சிறந்த முறையில் பணியாற்றிய  ஆய்வாளர் திரு.அருள் பிரகாஷ் அவர்களுக்கும் 20 சாதாரண குற்ற வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முத்துசாமி அவர்களுக்கும் ஆகஸ்ட் மாதத்தில் 105  வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்தி சிறப்பாக செயல்பட்ட கோட்டார் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ஜனமே ஜெயன் அவர்களுக்கும் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சாலைகளை அமைத்திட காரணமாக இருந்த ஆயுதப்படை ஆய்வாளர் திருமதி.சுஜாதா அவர்களுக்கும் குறுகிய காலத்தில் வழக்குகளை விசாரணை செய்து முடித்து, குற்றவாளிகளுக்கு அபராதத்துடன் கூடிய சிறை தண்டனையை பெற்றுத்தர  சிறப்பாக பணியாற்றிய கோட்டார் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. கிருஷ்ணப்பிரசாத், திருவட்டார் காவல் நிலைய பெண் தலைமை  காவலர் திருமதி.பிந்து மற்றும் தென்தாமரைகுளம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும் ஜாமீனில்  விட முடியாத 26 பிணைகளை  சிறப்பான முறையில் செயல்படுத்திய திருவட்டார் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.டேவிட் ராஜ் அவர்களுக்கும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பிணைப் பத்திரம் பெறுவதில் சிறந்த முறையில் பணியாற்றிய இரணியல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.பிரபாகரன் அவர்களுக்கும் CCTNS தளத்தில் அதிகப்படியான வழக்குகளை பதிவு செய்து சிறப்பாக செயல்பட்ட கருங்கல் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சத்தியதாஸ் அவர்களுக்கும் 9 கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 சவரன் தங்க நகைகளை கைப்பற்றி சிறப்பான முறையில் செயல்பட்ட தக்கலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அருளப்பன், களியக்காவிளை காவல் நிலைய தலைமை காவலர் திரு.சிம்சன், குலசேகரம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. ஷாலிஷ் பெஹின், கடையலுமூடு காவல் நிலையம் தலைமை காவலர் திரு.ஜான் அலெக்ஸ், மார்த்தாண்டம் காவல் நிலைய தலைமை காவலர் திரு.ராபட்ராஜ், தக்கலை காவல் நிலைய தலைமை காவலர் திரு.ஜெப அகஸ்டின், ஆயுதப்படை தலைமை காவலர் திரு.தேவதாஸ், தக்கலை காவல் நிலைய  முதல் நிலை காவலர் திரு.சைரஸ், கீரிப்பாறை முதல் நிலை காவலர் திரு.ராஜ்குமார் அவர்களுக்கும் ஈத்தாமொழி காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய 3 குற்றவாளிகளை கைது செய்ய உதவியாக இருந்த ஈத்தாமொழி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கிங்ஸ்லி மற்றும் தலைமை காவலர் திரு.பார்த்தசாரதி அவர்களுக்கும் ஆசாரிபள்ளம் KGMCH புறகாவல் நிலையத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.குமார், ஆரல்வாய்மொழி துப்பாக்கி சுடுதளத்தில் சிறந்த முறையில் செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. கருணை வேலன் மற்றும் Mike waiting அலுவலை சிறந்த முறையில் செய்த தலைமை காவலர்  திரு.ஜஸ்டின் வினோ அவர்களுக்கும் மாவட்ட காவல் அலுவலகத்தில் அவசர காலத்தில் மின் பழுதுகளை சரி செய்து சிறந்த முறையில் பணியாற்றிய* திரு.ஆறுமுகம் அவர்களுக்கும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களிடம் பிணைப் பத்திரம் பெறுவதில் சிறந்த முறையில் பணியாற்றிய அகஸ்தீஸ்வரம் தாசில்தார் திரு.ராஜேஷ் அவர்களுக்கும் மாவட்ட ஆயுதப்படையில் சிறந்த முறையில் சாலை அமைத்திட செயலூக்கமான ஆதரவை தந்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ஆனந்த மோகன் IAS அவர்களுக்கும் குண்டாஸ் வழக்கில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை கைது செய்தமைக்காக குளச்சல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.கிரிஸ்டி  அவர்களுக்கும் 30 சாதாரண குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மார்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.வினிஷ்பாபு அவர்களுக்கும் கன்னியாகுமரி மாவட்டம் சம்பந்தமான DSR-களை பெற்றுக்கொள்வதில் சிறந்த முறையில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜன் அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 

No comments:

Post a Comment