விவேகானந்தா கல்லூரி சார்பில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2023

விவேகானந்தா கல்லூரி சார்பில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி.

அகஸ்தீஸ்வரம் மற்றும் தென்தாமரைகுளம் பேரூராட்சிகளுக்குட்பட்ட தலக்குளத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆகாயத்தாமரைகள் படர்ந்து காணப்பட்டன. இதனைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபுமாறச்சன் தலைமை தாங்கினார். 


பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி தலைவர் காமராஜ் மற்றும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவேகானந்தா கல்லூரியின் செயலாளர் ராஜன் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மணிக்கண்ணன், ராஜதுரை, அஜந்தன், தங்கசாமி, சந்திரன், மாலைசூடும் பெருமாள் உட்பட மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.


- கன்னியாகுமரி செய்தியாளர்  என். சரவணன்

No comments:

Post a Comment