உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 22 November 2023

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர்,  துவக்கி வைத்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர். கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்:- உலக மாற்றுத்திறனாளிகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. 


மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒருவராக நிலைப்படுத்திடும் வகையில் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளும் தங்கள் திறமைகளை வெளிக்காட்டி உலகளவில் வெற்றி பெற்று வருகிறார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், 50 மீ. 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ ஓட்டப்பந்தயங்கள், தடை தாண்டி ஓடுதல், உருளை கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், 4x100 மீ தொடர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைப்பெற்றது. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் 18 சிறப்புப்பள்ளிகளிலிருந்து மனவளர்ச்சிகுன்றியவர்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் காதுகேளாதோர்கள் என சுமார் 175 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.


நடைபெறும் இப்போட்டிகளில் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார். முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அணிவகுப்பினை ஏற்றுக்கொண்டு, அவர்களுடன் கலந்துரையாடினார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மரு.சு.சிவசங்கரன். சிறப்புப்பள்ளி தலைமையாசிரியர்கள், தொண்டுநிறுவன நிருவாகிகள், மாவட்ட விளையாட்டு அலுவலக பணியாளர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment