புத்தன்கடை பகுதியில் செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம். மையம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 November 2023

புத்தன்கடை பகுதியில் செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம். மையம்.

திருவட்டார் அருகே புத்தன்கடை பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இதன் அருகில் பள்ளிகூடம், பெட்ரோல் பங்க், தனியார் ஆஸ்பத்திரி ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. இதனால் எப்போதும் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் இங்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ஏ.டி.எம். கடந்த 4 மாதங்களாக செயல்படாத நிலையில் உள்ளது. 


இதனால் வாடிக்கையாளர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.சம்மந்தப்பட்ட வங்கிக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் இந்த வங்கி வாடிக்கையாளர்கள் வேறு வங்கி ஏ.டி.எம்.களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட வங்கி உடனே நடவடிக்கை எடுத்து செயல்படாமல் இருக்கும் ஏ.டி.எம்.யை செயல்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

No comments:

Post a Comment