சபரிமலை சீசன் எதிரொலி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் போலீசார் மெட்டல் டிடெக்டர் சோதனை.  - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 18 November 2023

சபரிமலை சீசன் எதிரொலி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் போலீசார் மெட்டல் டிடெக்டர் சோதனை. 

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.


இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது. சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

No comments:

Post a Comment