தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 19 December 2023

தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.


கன்னியாகுமரி மாவட்டம் பரப்பளவில் 50 சதவீதம் விவசாய நிலங்களை அடங்கியுள்ளது. பெருமளவு மக்கள் விவசாய தொழிலையே நம்பி உள்ளனர். இந்நிலையில் குமரி மாவட்ட மக்கள் ஏற்கனவே கடந்த முறை பருவ மழை பெய்யாததால் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்து இருந்தனர்.

இந்த நிலையில் குறுவை சாகுபடி பருவத்திலாவது நமக்கு வருமானம் கிடைக்கும் என்று நம்பி ஏராளமான விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் பயிரிட்டு இருந்தனர். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த வரலாறு காணாத மழையால் வயல்களில் பயிரிடப்பட்டிருந்த நெற் பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் கன்னியாகுமரி மாவட்ட நெற் பயிர் விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.


இதே போன்று மா, பலா, வாழை, மிளகு, பூக்கள் சாகுபடி செய்திருந்த விவசாயிகளும் தோட்ட பயிர் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் வயல்களில் தண்ணீர் வழியாத நிலையில் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டு உள்ளனர். மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி மற்றும் வெள்ளம் ஆகியவை பேரிடியாக உள்ளது எனவே தமிழக அரசு கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் துயரை துடைக்கும் வகையில் அவர்கள் பயிரிட்டிருந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு இருபத்திஐய்யாயிரம் ரூபாய்(25 ஆயிரம் ரூபாய்)வழங்க வேண்டும். மேலும் இதை உடனடியாக தமிழக முதலமைச்சர் வழங்கி குமரி மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் துயரை துடைத்து வேதனையை போக்கிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை விடுத்துள்ளார். 

No comments:

Post a Comment