தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 23 December 2023

தமிழக காங்கிரஸ் கமிட்டி விவசாய பிரிவு மாநில செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை.


தகுதியற்ற ஒருவர் மத்திய நிதி அமைச்சரானதால். நேற்று 22.12.2023 மதியம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொலைக் காட்சிகளில் தோன்றி பேட்டி என்கிற பெயரில் பொய் பொய்யாக கதைகளை அள்ளி விட்டுக் கொண்டிருந்தார் அவருடைய பேச்சில் ஆணவம் தெரிந்ததே தவிர இயற்கை விளைவித்த மழை வெள்ள பாதிப்புகளால் மக்கள் படும் துயரங்களை, துன்பங்களை, சோகங்களை பற்றி சிறிது கூட அக்கறை இல்லாதவர் போல் அவருடைய ஆணவமான திமிரான பேட்டி இருந்தது அவர் மட்டுமல்ல பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அளிக்கிற பேட்டிகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுகிறோம் என்று அவர்கள் நடத்துகிற கூத்துக்கள் எல்லாமே பொய்யை மையமாக வைத்தே நடை பெறுகிறது.தமிழக ஆட்சியாளர்கள், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் எல்லோரும் அக்கறையோடு, மக்களை துயரத்தில் இருந்து மீட்டெடுக்க பாடு படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு முதல்வரும் களத்தில் இறங்கியும் கள நிலவரங்களை அறிந்து உடனுக்குடன் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து பொது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.


ஆனால் மத்திய அரசு இது வரை மத்திய குழுவை அனுப்பி வைத்திருக்கிறார்களே தவிர மத்திய அரசில் அமைச்சர் பொறுப்பில் இருக்கக் கூடிய எவரும் இது வரை சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கோ வரவில்லை. சென்னை பாதிப்புகளை பார்க்க வந்த மத்திய குழு, தமிழக அரசின் செயல் பாட்டால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று பேட்டி அளித்து விட்டுச் சென்ற சூழலில், இதை எல்லாம் கவனித்து தானே பொறுப்பான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்திருக்க வேண்டும்.


வாய்க்கு வந்ததை எல்லாம் உண்மை என பேசினால் எப்படி புரிந்து கொள்வது. காழ்புணர்ச்சியில் பொய்யை மட்டுமே பேசுகிற நிர்மலா சீதாராமனுக்கு உண்மை நிலைமை என்ன வென்று புரிய போவதில்லை.தமிழக அரசு கேட்ட நிதி என்ன?மத்திய அரசு அளித்த நிதி என்ன? மலைக்கும், மடுவுக்குமான வேறுபாடு என்பதை கூட தமிழக மக்கள் நன்கு உணரமாட்டார்களா? சென்னை பாதிப்பை சரி செய்ய தமிழக அரசு கேட்டது ரூபாய் 5000 கோடிக்கு மேல் என்றால் கொடுத்தது வெறும் ரூபாய் 400 கோடி தானே!உங்கள் பேட்டியில் எல்லாம் கொடுத்து முடித்தாகி விட்டது என்று பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்கிறீர்களே!


தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்பது உரிமை. ஏன் இதனை பேரிடராக அறிவிக்க கூடாது.மற்ற மாநிலங்களில் சிறு பாதிப்பு என்றால் விமானத்தில் பறந்து வரும் பாரதப் பிரதமர், தமிழகத்தின் தலை நகரமும், தென் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கிற போது ஏன் இங்கே வரவில்லை.தமிழ் நாட்டை மத்திய அரசாங்கம் தொடர்ந்து புறக்கணிக்கப் படுவது வெள்ள பாதிப்பிலும் வெளிப்படுகிறது. தமிழக அரசு கேட்பது நிர்மலா சீதாராமன் அவர்களுடைய அப்பன்,பாட்டன் வீட்டு சொத்தையோ கேட்கவில்லை. தமிழக மக்கள் செலுத்துகிற வரிப்பணத்தில் இருந்து தான் கேட்கிறோம்.தமிழக மக்களை மழை வெள்ள பாதிப்பில் இருந்து மீட்டெடுக்க தமிழக அரசு கேட்கிற நிதியானது, அம்பானி அதானி உள்ளிட்ட மோடியின் நண்பர்கள் வாங்கிய கடனை வங்கிகளில் இருந்து தள்ளுபடி செய்தீர்களே,அந்த 25 லட்சம் கோடியோடு ஒப்பிட்டால்,வெள்ள நிவாரண நிதியாக கேட்டது சிறிய தொகை தான்.


டெல்லிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரை நாள் டெல்லி சென்றதை கேள்வி கேட்கும் நிர்மலா சீதாராமன் அவர்களே,தமிழக முதலமைச்சர் அவர்கள் டெல்லிக்கு செல்லும் முன்,கள பணிகளில் துடிப்பாக செயல் படும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், அமைச்சர் பெருமக்களையும் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு தான் சென்றார் என்கிற உண்மை தமிழக மக்களுக்கு தெரியும். பிரதமரும், உள்துறை அமைச்சரும், ஏன் நீங்களும் கூட, எங்கே போனீர்கள் உங்களுக்கு 146 எம்பிக்களை வெளியேற்றிவிட்டு, மக்களுக்கு எதிரான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் நிறைவேற்ற நீங்கள் துடித்தீர்களே? அதை நிறுத்திவிட்டு ஏன் தென் மாவட்டங்களுக்கும், சென்னைக்கும் வந்திருக்கக் கூடாது. அது நீங்கள் செய்யும் அரசியல் தானே.


தமிழக மக்களை வெள்ள நிவாரணத்திலிருந்து பாதுகாப்பதோடு, இந்திய மக்களை உங்கள் ஆட்சி கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்கிற காரணத்திற்காகத்தான் தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றார் என்பதை உணர்ந்து தான், நீங்கள் அரை நாள் டெல்லி சென்றதை பிரச்சினையாக்குகிறீர்கள் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள்உலகமே உங்களை பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது நாடாளுமன்றத்திற்குள், உங்கள் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனுமதியோடு வந்து புகை குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment