கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி. பலத்த போலீஸ் பாதுகாப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 23 December 2023

கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி. பலத்த போலீஸ் பாதுகாப்பு.


கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணித்து வருகின்றனர். 


மேலும் குடித்துவிட்டு வாகனம் ஒட்டுனாலோ அல்லது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் IPS அவர்கள் எச்சரித்துள்ளார்.



பொதுமக்களின் உயிருக்கு உறுவிளைவிக்கும் இருசக்கர வாகனம் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமுக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி மாவட்டதை சேர்ந்த பல்வேறு நபர்கள் சென்ற மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வரக்கூடிய பண்டிகை நாட்களை பாதுகாப்பான முறையில் கொண்டாடி மகிழ்ந்திட பொதுமக்கள் அனைவரையும் கன்னியாகுமரி காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.


கன்னியாகுமரி செய்தியாளர். சரவணன்

No comments:

Post a Comment