சட்டவிரோத கனிம வள கொள்ளையை தடுக்க கோரி பேரூராட்சி மக்கள் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 30 January 2024

சட்டவிரோத கனிம வள கொள்ளையை தடுக்க கோரி பேரூராட்சி மக்கள் மனு.


கன்னியாகுமரி மாவட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மண் மற்றும் பாறைகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஒரு சிலர் லஞ்சம் பெற்று அனுமதி கொடுத்ததாகவும் அதன்படி அப்பகுதியில் கனரக வாகனங்கள் மூலம் மண் மற்றும் பாறைகளை உடைத்து விற்க அனுமதி அளித்துள்ளதாகவும் கூறி ஒரு சில கனிமவள கடத்தல் கும்பல்கள் முயற்சித்து வந்துள்ளனர். 

இதனால் பேரூராட்சியில் அப்பகுதியில் கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கவோ அதை கனரக வாகனங்கள் கூட செல்ல முடியாத சிறு சாலை வழியே கொண்டு செல்லவும் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். குறிப்பாக நிலத்தை சமன்படுத்த என்று கூறி சட்டவிரோதமாக அதிகாரிகள் துணையுடன் அனுமதி பெற்று கனிம வள கடத்தல் கும்பல்கள் கனிம வளத்தை விற்க முயன்று வருவதாக தெரிகிறது. 


இந்நிலையில் மீண்டும் மிகப்பெரிய கனரக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் கனரக டாரஸ் லாரிகளின் மூலமாக மண் மற்றும் பாறைகளை உடைத்து கனிம வளங்களை விற்க முயற்சி செய்யும் கும்பல்கள் அங்கிருந்து மீண்டும் கனிம வளங்களை கடத்த முயற்சித்து வருகின்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக முருங்க விளை அருகில் கரிக்கி பகுதி சாலையில் இருந்து நடுவத்தன் விளை -  தாரத்தட்டு பகுதிக்கு செல்லும் சிறு சாலையில்  கனரக வாகனங்கள் செல்ல இயலாதபடி மிகவும் குறுகிய சாலையாக உள்ளதால் அப்பகுதியில் பேருந்தை கூட இயக்க அரசு மறுத்து வரும் நிலையில் அந்த பகுதியில் நெருக்கமாக உள்ள வீடுகளையும் பல்வேறு விவசாய நிலங்களையும் சீரழிக்கும் விதமாக கனிம வள கடத்தல் கும்பல்கள் ஒரு சில லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கையில் போட்டு அவர்களுக்கு கணிசமான தொகை லஞ்சம் கொடுத்து சட்ட விரோதமாக மண் மற்றும் பாறைகளை அகற்ற அனுமதி பெற்றுள்ளதாக கூறி கனரக வாகனங்களுடன் அப்பகுதிக்கு சென்று உள்ளனர். 


தகவல் தெரிந்த ஊர் மக்கள் ஒன்று திரண்டு கனரக வாகனங்களை சிறை பிடித்து திருப்பி அனுப்பி உள்ளனர். குறிப்பாக அதில் வந்த ஒரு சிலர் தாங்கள் தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் என்றும் காவல்துறை பாதுகாப்புடன் தாங்கள் மண் மற்றும் பாறைகளை உடைத்து அப்புறப்படுத்துவோம் என்றும் சவால் விட்டு கூறியுள்ளனர். இது சம்பந்தமாக பேரூராட்சியில் விவாதம் நடத்தப்பட்டு பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று அப்பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மண் மற்றும் பாறைகளை அகற்ற தடை செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். 


மேலும்  அப்பகுதி பொது மக்கள் பேரூராட்சி தலைவரின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் பெரிய வாகனங்கள் செல்ல இயலாத சிறிய சாலையில் அரசு பேருந்துகள் கூட இயங்க முடியாத நிலையில் உள்ள சிறிய சாலை வழியாக பெரிய கனரக வாகனங்களை கொண்டு சென்று அப்பகுதியில் மண் மற்றும் பாறைகளை உடைத்து எடுப்பதால் அப்பகுதியில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் வீடுகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றும் சிறிய சாலை வழியே செல்லும் போது விபத்துக்கள் ஏற்படவும் வீடுகள் சேதம் அடையவும் விளை நிலங்கள் அழியவும் வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளனர். 


ஆகவே சட்ட விரோதமாக அனுமதி கொடுத்ததாக கூறப்படும் அதிகாரிகள் யார் என்பதை கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து சட்டவிரோதமாக அனுமதி கொடுத்து இருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment