லெமூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 29 January 2024

லெமூர் கடற்கரை பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கினார்கள்.


கன்னியாகுமரி மாவட்டம், லெமூர் கடற்கரை பகுதியில் ட்ரை 2 சாம்ப் (Try 2 Champ) நிறுவனத்தின் சார்பில், நீச்சல் போட்டி, சைக்கிள் போட்டி மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள் நடத்தப்பட்டது. முதலாவதாக கடலில் 0.5 கி.மீ. 1 கி.மீ. 1.5 கி.மீ. 2.5 கி.மீ, 5 கி.மீ மற்றும் 10 கி.மீ வரை ஆகிய பிரிவுகளில் நீச்சல்போட்டிகள் நடத்தப்பட்டது. 

மேலும் சைக்கிள் போட்டி 20 கி.மீ பிரிவிலும், ஓட்டப்பந்தய போட்டியானது 10 கி.மீ மற்றும் 20 கி.மீ ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டிகள் அனைத்தும் கடல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்டது.நடைபெற்ற போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 9 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திரளாக பலர் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் பரிசுகள் வழங்கினார்கள்.

No comments:

Post a Comment