மருங்கூர் பகுதியில் 14.5 லட்சம் செலவில் புதிய கட்டிடம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 9 February 2024

மருங்கூர் பகுதியில் 14.5 லட்சம் செலவில் புதிய கட்டிடம்.


கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பத்மனாபன்புதூரில் புதிய அங்கன்வாடி கட்டிடம் தேவை என்ற மக்கள் கோரிக்கையை ஏற்று புதிய கட்டிடம் கட்டுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகளை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு.விஜய்வசந்த் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்கள்.தொடக்க விழாவுக்கு மருங்கூர் பேரூராட்சி தலைவி லட்சுமி சீனிவாசன் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் திரு.காலபெருமாள், மருங்கூர் பேரூராட்சிசெயல் அலுவலர் திரு.ராஜேஷ், பேரூராட்சி துணைத்தலைவி பாலரோகிணி, காங்கிரஸ் பேரியக்க மருங்கூர் பேரூராட்சி தலைவர் திருமதி.K.சகாய ஹெலன், கவுன்சிலர் அருள்சாரதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  


இதில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார துணைத்தலைவர் திரு.பெரியசாமி, மருங்கூர் பேரூர் தி.மு.க செயலாளர் மகேஷ், கண்ணன், அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத்தலைவர் ஆண்ட்ரூஸ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment