அங்கன்வாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 9 February 2024

அங்கன்வாடி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா.


கன்னியாகுமரி மாவட்டம் கொடியூரில் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான துவக்க விழா எம்எல்ஏ பிரின்ஸ் தலைமையில் நடந்தது. முளகுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு கோடியூரில் அங்கன்வாடி மையம்  பல வருடங்களாக சீரமைக்காமல் பழுதடைந்து காணப்பட்டது. அப்பகுதியினர் நீண்ட காலமாக அதனை சீரமைக்க வேண்டி சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 12. 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் துவக்க விழா நடந்தது. 

இதில் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கலந்து கொண்டு புதிதாக கட்டவிருக்கும் அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கல் நாட்டி அதன் பணியை துவங்கி வைத்து பேசினார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், முளகுமூடு பேரூராட்சி துணைத் தலைவர் ஜெகின்ஸ், முன்னாள் தக்கலை வட்டார காங்கிரஸ் தலைவர் டென்னிஸ், காங்கிரஸ் பேரூர் தலைவர் நெல்சன், வார்டு உறுப்பினர்கள் ராஜகுமார், பிரேம் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment