அதன் அடிப்படையில் இன்று 10.02.2024 நாகர்கோவில் மாநகர உணவு பாதுகாப்பு துறையும் ,சின்ன முட்டம் மீன்வளம் மற்றும மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையிலான குழுவும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் இணைந்து நாகர்கோவில் கணேசபுரம் மீன் சந்தை மற்றும் வடசேரி மீன் சந்தையில் விற்பனை செய்யப்படும் மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேற்படி ஆய்வின் போது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது, பார்மலின் மீன்கள் மீது தடவப்பட்டிருக்கிறதா என்றும் மீன் விற்பனைக்கு தகுதியானதா எனவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி ஆய்வில் நாகர்கோயில் மாநகர உணவு பாதுகாப்பு அலுவலர் திரு .குமார பாண்டியன், திரு. சங்கரநாராயணன் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் திரு .மரிய பிரான்ஸ்கோ விவின் மற்றும் மேற்பார்வையாளர் திரு. கார்த்தீபன், நாகர்கோவில் மாநகர மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சத்யராஜ் திரு மாதேவன் பிள்ளை ஆகியோர் கொண்ட குழு கணேசபுரம் மற்றும் வடசேரி மீன் சந்தையில் திடீர் ஆய்வு செய்து, விற்பனைக்கு, மற்றும் உணவு பயன்பாட்டிற்கு தகுதியற்ற மற்றும் கெட்டுப்போன மீன்கள் சுமார் 230 கிலோ அளவில் பறிமுதல் செய்து அளிக்கப்பட்டது. சுண்ணாம்பு தூள் மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு மாநகராட்சி உரக்கிடங்கில் கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. பார்மலின் கெமிக்கல் தடவப்பட்ட மீன்கள் ஏதும் பரிசோதனையில் இல்லை எனவும் தெரியவந்தது.
No comments:
Post a Comment