1 கோடியே 8 இலட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 11 February 2024

1 கோடியே 8 இலட்சம் செலவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.


நாகர்கோயில் நாகராஜா  திருக்கோவிலில் 2022-23 சட்டமன்ற அறிவிப்பின்படி  ஆணையர் பொது நல நிதி ரூ. 1 கோடியே 8 லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணிக்ள் நடைபெற உள்ளது. இதில் விமானப் பணி, தரைத்தளம், ஒடுகள் மேல்தளம் புணரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. 

சிறப்பு பூமி பூஜைகள் செய்து  பணிகள் துவக்க விழா, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்  நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மராமத்து பொறியாளர் ராஜ்குமார், கோயில் ஸ்ரீகாரியம் ராமச்சந்தரன், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம் பிள்ளை, ராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவர் சரவணன், வள்ளலார் பேரவை மாநில தலைவர் பத்மேந்தர சுவாமிகள், ஒப்பந்தகாரர் மோகன்தாஸ் உட்பட கட்சி நிர்வாகிகள் பக்தர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment