குளச்சலில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 8 February 2024

குளச்சலில் மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் சாம்(63), இவரது மனைவி பரம ஜெசி லெட். இத்தம்பதியினருக்கு ஜெபஷாலினி என்ற மகள் உள்ளார். ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்த ஜெஸ்டின் சாம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பினார். 

இவர் நேற்று முன்தினம் மாலை தனது பைக்கில் கடைக்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் பரம ஜெசிலெட் மற்றும் மகள் ஜெப ஷாலினி ஆகிய இருவர் மட்டுமே இருந்துள்ளனர். இரவு சுமார் 7. 15 மணி அளவில் திடீரென்று வீட்டுக்கதவை யாரோ தட்டி உள்ளனர். பரம ஜெசிலெட் கதவை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வாசல் முன்பு தயாராக நின்ற வாலிபர் ஒருவர் திடீரென பரம ஜெசிலெட்டை தாக்கி விட்டு வீட்டுக்குள் புகுந்து, அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன்  செயினை பிடித்து இழுத்து உள்ளார். 


அவர் செயினை விடாமல் பிடித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டார். அவரது சத்தம்கேட்டு ஓடி வந்த ஜெப ஷாலினி தாயாரின் செயினை பிடித்து இழுத்துக் கொண்டு இருந்த கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இன்னொரு நபர் அங்கிருப்பார் என்பதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன் அதிர்ந்து போனான், ஆனாலும் அந்த கொள்ளையன் 2 பெண்களையும் கடுமையாக தாக்கி கீழே தள்ளி விட்டு தப்பியோடி விட்டான். 


இது குறித்து குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பனவிளையை சேர்ந்த சிவா(24)என்பவரை கைது செய்தனர் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment