குவைத் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்களை குடும்பத்துடன் ஒப்படைத்த விஜய் வசந்த் MP. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 February 2024

குவைத் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகி தப்பிவந்தவர்களை குடும்பத்துடன் ஒப்படைத்த விஜய் வசந்த் MP.


குவைத் நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாகி, அங்கிருந்து கடல் வழி தப்பி வந்து மகாராஷ்டிரா போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களுக்கு விடுதலை பெற்று கொடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்த சகாய ஆன்டனி, ஆரோக்கியபுரம் மீனவ கிராமத்தை சேர்ந்த இன்பன்ட் விஜய் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த நிடிஸோ ஆகியோர் குவைத் நாட்டில் தனியார் நிறுவனத்தில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு ஊதியம் வழங்காமல் இந்த நிறுவனம் இவர்களை வைத்து வேலை வாங்கி வந்தனர். சம்பளம் கேட்ட போது இவர்களை அடித்து துன்புறுத்தி சித்தரவதை செய்தனர். மேலும் இவர்கள் பாஸ்போர்ட்டை இந்த நிறுவனம் கையகப்படுத்தி இவர்கள் ஊருக்கு திரும்ப விடாமல் செய்து விட்டனர். 


உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வேதனைக்கு உள்ளான  இந்த மீனவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள வேறு வழி இல்லாமல் அங்கிருந்த ஒரு படகில் ஏறி இந்தியாவிற்கு வந்தனர். மும்பை கடற்கரை பகுதியினுள் ஒதுங்கிய இவரை கொலாபா போலீஸ் கைது செய்தனர். இந்த செய்தியை அறிந்து மும்பையில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் உதவியுடன்  வழக்கறிஞரை நியமித்து அவர்களது விடுதலைக்கு கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முயற்சிகள் மேற்கொண்டார்.‌ 


முயற்சிகளின் பலனாக நேற்று இவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இன்று சிறையிலிருந்து விடுதலை பெற்ற இவர்களை விமானம் மூலம் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து  நாகர்கோவில் அவரது அலுவலகத்தில் வைத்து காத்திருந்த குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment