கேட்பாரற்ற நிலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருட்டு வாகனங்கள்?; தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 11 March 2024

கேட்பாரற்ற நிலையில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருட்டு வாகனங்கள்?; தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலாவதியான வாகனங்களை உடைத்து இரும்பு விலைக்கு இரும்பு ஆலைகளுக்கு அனுப்ப பல இடங்களில் காயலான் கடைகள் செயல்பட்டு வருகிறது. அங்கு வாகனங்களை உடைத்து அதன் ஸாபேர் பார்ட்ஸ்களை விற்பனை செய்வதும் நடந்து வருகிறது. இதில் திருட்டு வாகனங்களை வாங்கி உடைத்து பிரித்து விற்பனை செய்யும் செயல்களும் நடைபெற்று வருகிறது. 

அவ்வாறு திருட்டு வாகனங்களை வாங்கும் நபர்கள் மற்றும் வாகன திருடர்கள் தாங்கள் திருடிய வாகனங்களை அல்லது திருட்டு வாகனங்களை வாங்கிய நபர்கள் வந்த வாகனங்களை தங்களுக்கு சம்பந்தமில்லாத பகுதியில் உள்ள சாலை ஓரங்களில்  பல நாட்களாக நிறுத்தி வைத்து அதன் பின்னர் ரகசியமாக எடுத்துச் சென்று அதை உடைத்து அதன் ஸ்பேர் பார்ட்ஸ்களை ரகசியமாக விற்பனை செய்யும் செயல்கள் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மார்த்தாண்டம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உண்ணாமலை கடையில் இருந்து சிராயன்குழி செல்லும் சாலையில் வீடுகள் மத வழிபாட்டு ஸ்தலங்கள் மற்றும் மருத்துவமனை ஆகியவை உள்ள பகுதியில் சாலை ஓரம் கேட்பாரற்ற நிலையில் மேற்கண்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. 


அக்கம் பக்கத்தினர் கூட யாரும் உரிமை கொண்டாடாமல் கேட்பாரற்ற நிலையிலே உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர். குறிப்பாக தற்போது தீவிரவாத செயல்கள் கூட ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பல்வேறு கொலை சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது இப்படிப்பட்ட சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்திய வாகனங்கள் இதுபோன்ற சட்ட விரோத கும்பல்கள் தங்களுக்கு சம்பந்தமில்லாத தூர பகுதிகளில் உள்ள சாலையோரம் நிறுத்தி  தப்பி விடுவது உண்டு. அதன் பின்னர் அவர்கள் காலதாமதமாக வந்து அந்த வாகனங்களை கொண்டு சென்று மறைத்து விடுவதும் உண்டு. அதன் பின்னர் போலீசார் அந்த வாகனங்களை தேடிச் சென்றால் கூட அவைகள் கிடைப்பது இல்லை. குறிப்பாக குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. 


அவ்வாறான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களா என்பது கூட தெரியாத நிலையில் பல மாதங்களாக மேற்படி சொகுசு வாகனங்கள் அப்பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும் இதுகுறித்து மார்த்தாண்ட காவல் நிலையத்தில் பலமுறை தகவல் தெரிவித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருட்டு வாகனங்களை வாங்கும் காயலான் கடை வியாபாரிகள் அந்த வாகனங்களை தங்கள் கடையில் நிறுத்தி வைத்திருந்தால் போலீசாரால் பிரச்சனை ஏற்படும் என்று கருதி தற்காலிகமாக பிரச்சனை ஏதும் வராதது வரை தங்களது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ள ஏதாவது சாலை பகுதிகளில் நிறுத்திவிட்டு அதன் பின்னர் திடீரென்று எடுத்துச் சென்று அந்த வாகனங்களை உடைத்து அதன் ஸ்பேர் பார்ட்ஸ்களை விற்று விடுவதாக கூறுகின்றனர். 


மேலும் பல நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கும் மேற்படி வாகனங்களில் விஷ ஜந்துக்கள் குடி இருந்து வர வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் அப்பகுதி மக்கள் அவ்வழியே செல்லும் போது அந்த விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் கவலை தெரிவித்தனர். ஆகவே தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத மார்த்தாண்டம் காவல் நிலைய போலீசார் உடனடியாக கேட்பாரற்ற நிலையில் நிறுத்தப்பட்டுள்ள திருட்டு சம்பவத்தில் உள்ள வாகனங்களா அல்லது குற்றச்சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்ட வாகனங்களா என்பதை விசாரணை செய்ய அந்த வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

No comments:

Post a Comment