2 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கேரள கும்பல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 12 March 2024

2 கடைகளில் பூட்டை உடைத்து திருடிய கேரள கும்பல்.


கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் ஹோமியோ மருத்துவ கல்லூரிக்கு எதிரே உள்ள வணிக வளாகத்தில் டீ ஸ்டால், குளிர்பான கடையில் மர்ம நபர்கள் திருடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவில் 2 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள பல பொருட்கள் மற்றும் பணத்தை சூறையாடியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிரா காட்சி களை ஆய்வு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கேரளாவை சேர்ந்த கும்பல் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். கொள்ளை சம்பவம் நடந்த பகுதிகளில் மேலும் சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்யஉள்ளனர். 


குலசேகரத்தில் முகாமிட்டு இந்த பகுதியையே முற்றிலும் சூறையாடும் நோக்கில் கொள்ளையர்கள் சுற்றிவருவது பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:

Post a Comment