கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த வாகனம் மடக்கி பிடித்த பொது மக்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 28 April 2024

கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த வாகனம் மடக்கி பிடித்த பொது மக்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு பகுதியில் நள்ளிரவில் கேரளாவில் இருந்து கோழி கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை துரத்திச் சென்று மடக்கி பிடித்த பொதுமக்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த வாகனம் அந்த வழியாக நள்ளிரவு சென்று வருவதை  அப்பகுதி இளைஞர்கள் கண்காணித்து வந்த நிலையில் நேற்று இரவு மடக்கி பிடித்தனர்.

அருமனை, களியல், களியக்காவிளை காவல் நிலைய போலீசார் செய்ய வேண்டிய வேலையை பொதுமக்கள் செய்து வருகின்றனர். தொடர்ந்து கேரளா மருத்துவ கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை குமரி மாவட்டத்திற்குள் கொட்ட சோதனை சாவடியில் பணிபுரியும் சில போலீசார் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

No comments:

Post a Comment