இதுகுறித்து துரைராஜ் சகோதரி ரோஸ்மேரி என்பவர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் துரைராஜன் மார்பு பகுதியில் கம்பால் தாக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. மேலும் அவருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் இறந்துள்ளதாகவும் டாக்டர்கள் அறிக்கை தெரிவித்தது. Also Read - மேட்டுக்குப்பம் கிராமத்தில் தேர்தல் பணிகள் குறித்து ஆய்வு இதற்கிடையில் துரைராஜ் இறந்ததும் ரோஸ்மேரியன் மகன் ரஜிஷ் ராகேஷ் (23) என்பவர் தலைமறைவானார்.
இதனால் போலீசாரின் பார்வை ரஜிஷ் ராகேஷ் மீது திரும்பியது. அவரை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்த போது, தாய் மாமா துரைராஜும் அவரும் சேர்ந்து மது அருந்துவதாகவும் கடந்த ஏழாம் தேதி மோதிரத்தை அடகு வைத்து மது அருந்தியதாகவும், அப்போது 2000 ரூபாயை மது வாங்கியதாகவும் மீதி 2000 ரூபாயை தாய் மாமா துரைராஜ் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்ததாகவும் கூறினார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கக மாற்றி ரஜிஷ் ராகேஷை கைது செய்து இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment