நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் திடீர் சரிவு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 28 April 2024

நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் திடீர் சரிவு.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை உள்ளது. 25 அடி நீர்மட்டம் கொண்ட இந்த அணையில் இருந்து வினாடிக்கு 8 முதல் 10 கன அடி தண்ணீர் நாகர்கோவிலுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதத்தில் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் நிலைக்கு வந்துவிடுவது வழக்கம். அப்போது குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் திறந்து விட்டு நிலைமை சமாளிப்பார்கள். 

இந்த நிலையில் தற்போது முக்கடல் அணை நீர் மட்டமும் சரிந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி 4அடியாக குறைந்தது. இன்னும் சில தினங்களில் மைனஸ் அளவுக்கு முக்கடல் அணை நீர்மட்டம் சென்று விடும் என தெரிகிறது. முக்கடல் அணையில் நீர்மட்டம் குறைந்தாலும், நாகர்கோவில் மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவித்தனர். 

No comments:

Post a Comment