80 -இளம் விஞ்ஞானி விருது வழங்கும் விழா குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆற்றூரில் நடைபெற்றது. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 May 2024

80 -இளம் விஞ்ஞானி விருது வழங்கும் விழா குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆற்றூரில் நடைபெற்றது.

 


80 -இளம் விஞ்ஞானி விருது வழங்கும் விழா குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆற்றூரில் நடைபெற்றது.


குமரி அறிவியல் பேரவை சார்பில் மனிதசவால்கள்,வாழ்க்கை சவால்களும் தீர்வுகளும், தொழில்நுட்பங்களால் மனித சவால்களுக்கான தீர்வுகள் 


ஆகிய தலைப்புகளில்  ஒரு வருடகாலம் ஆய்வு செய்து திருவனந்தபுரம் என்.ஐ.ஐ.எஸ்.டி மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானிகள் மத்தியில் நூலாக சமர்ப்பித்து சான்றிதழ் பெற்றனர். அவர்களுக்கான  இளம் விஞ்ஞானி விருது வழங்கும் விழா ஆற்றுர் என்.வி.கே.எஸ்.டி கல்லூரியில் வைத்து நடைபெற்றது.


குமரி அறிவியல் பேரவையானது 2002 ஆம் ஆண்டு முதல் இந்த விருதினை குமரி மாவட்டத்தில் உள்ள அரசு, மற்றும் தனியார்  பள்ளிகளில் பயிலும்   8 வது வகுப்பு  மாணவ, மாணவிகள் 9- கட்ட தேர்வுக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஓராண்டு காலம் பல ஆய்வு நிறுவனங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி வருகிறது.

  


கடந்த 2002-ஆம் ஆண்டு தொடங்கபட்டு தொடர்ந்து 22-வருட காலமாக  பல்வேறு துறைகளில் சாதனை புரிபபவர்களாக அதன் நிறுவனர் முள்ளஞ்சேரி மு. வேலையன் இடைவிடாது  செயல்பட்டு மாற்றியுள்ளார் இந்த ஆண்டு  தேர்ச்சி பெற்ற 80 மாணவ, மாணவிகளுக்கு இன்று (18-05-2024)

 

ஆற்றூர் என்.வி.கே எஸ்.டி கல்லூரியில் வைத்து விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி துறையின் திரவ இயக்கத்தந்தையாகவும் இந்திய கடல் மேம்பாட்டுத்துறையின் முன்னாள் செயலாளருமாகிய டாக்டர் ஏ.இ முத்து நாயகம் விருது வழங்கி கௌரவித்தார்.


ஆற்றூர் என்.வி.கே.எஸ் கல்விக்குழுமத்தின் செயலாளர் வக்கீல். எஸ்.கிருஷ்ண குமார் ஆற்றூர் என்.வி.கே.எஸ்.கல்வியியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஶ்ரீலதா பேராசிரியர் பிரசோபுமாதவன் ஆகியோர் வாழ்த்தினர்


இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத்தலைவர் டாக்டர். கே. விஜய குமார் . ஒருங்கிணைப்பாளர்கள் ஜாண்சன், டெசிஜோசப்,முனைவர் தன்யா, சுனில்குமார் ,முனைவர் ஹெலன் ஷோனியா,பேராசிரியர் பா.மலர்,திருவேங்கடம், பேராசிரியர் சஜிவ்  முனைவர். ராபர்ட்குமார், முதல்வர்.தங்கம் பிரியாஶ்ரீஜித், வி.வி.விக்ரம், முனைவர் வி.வி.வினோத்,தீபா கவிஞர் குமரித்தோழன் ஆகியோர் வாழ்த்தினார்கள்.சாஜி தலைமையில் பெற்றோர்கள் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் இளம் விஞ்ஞானிகளுக்கு ஆசியுரை வழங்கினார் முன்னால் இளம் விஞ்ஞானிகள் மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், உறவினர்கள் ,என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment