முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி அவர்களின் 33 - வது நினைவு தினத்தை முன்னிட்டு பெங்களூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நடைபெறும் ராஜீவ் காந்தி அவர்களின் நினைவு ஜோதி யாத்திரையை,
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.K.T.உதயம் அவர்கள் தலைமையில், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் திரு.JG.பிரின்ஸ் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் Adv திரு.S. ராஜேஷ்குமார் MLA அவர்கள்,
கன்னியாகுமரியில் வைத்து பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்து தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் வட்டார தலைவர் சேம்சுரேஷ், பேரூராட்சி தலைவர் சந்திராயப்பன், சந்திரா, இசக்கி பாண்டியன், சகாயராஜ், டேனியல், தங்கலெட்சுமி, முருகேசன் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment