9 லட்சம் செலவில் கும்பாபிஷேகம் பணிகள் நடந்தன
இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் செங்கோட்டை தொகுதி *ஆயக்குடி பணையடியான் சாஸ்தா கோயிலில்* சட்டமன்ற அறிவிப்பு 2022-23 ன் படி திருப்பணிகள் வேலைகளுக்கு திருக்கோயில் நிதி ரூ. 9 லட்சம், செலவில் கும்பாபிஷேகம் பணிகள் நடந்தன. பணிகள் நிறைவுற்று இன்று காலை 9.30 மணி அளவில் கும்பாபிஷேகம் குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் *பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில்* நடந்தது.
அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர், மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீகாரியம் ரத்னவேலு, கோபால், கிளங்காடு தி.மு.க. கிளை செயலாளர் ராமர், செங்கோட்டை ஒன்றிய துணைத் தலைவர் கலா, தமிழ்நாடு சேனைத்தலைவர் மாநில தலைவர் மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment