சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா வருகிற மே 8 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பாரம்பரிய முறைப்படி இன்று திருக்கோயில் வழி வகை ஊர் தலைவர்களுக்கு மஞ்சள் வைத்து அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி குமரி மாவட்ட திருக்கோயில்கள் நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசி தரன் நாயர், கோயில் மேலாளர் ஆறுமுகதான், கணக்கர் கண்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுஷியா, பேரூர் செயலாளர் சுதை சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கன்னியாகுமரி செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment