நாகர்கோவில், தேர்தல் தோல்வி பயம் காரணமாக கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய பிரதமர் மோடி வருவதாக தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் குற்றம்சாட்டினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 29 May 2024

நாகர்கோவில், தேர்தல் தோல்வி பயம் காரணமாக கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய பிரதமர் மோடி வருவதாக தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் குற்றம்சாட்டினார்.

 


நாகர்கோவில், தேர்தல் தோல்வி பயம் காரணமாக கன்னியாகுமரிக்கு தியானம் செய்ய பிரதமர் மோடி வருவதாக தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் குற்றம்சாட்டினார்.


கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார். அவர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் 3 நாட்கள் தியானம் செய்ய உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ராகுல்காந்தி பேரவை மாநில தலைவர் நாஞ்சில் ரஜினிசெல்வம் கூறியதாவது:


மக்களை ஏமாற்றும் போலி ஆன்மீகவாதி மோடி. இந்து மத சட்ட திட்டங்களை, பூஜை புனஸ்காரங்களை நன்கு கற்றறிந்த வேத விற்பன்னர்கள் மட்டுமே செல்லக்கூடிய கோயில் கருவறைக்குள் அதிகார துஷ்பிர யோகம் செய்து அயோத்தி பால ராமர் கோயில் கருவறைக்குள் சென்று இந்துக்களையும், இந்து தர்மத்தையும் கொச்சைப்படுத்தி உள்ளார்.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இந்து மடாதிபதிகள் அயோத்தி பாலராமர் தீ கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தியானம் என்றபோர்வையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு  வருகை தரும் மோடியின் நிகழ்ச்சியை உண்மையான  இந்துக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.


இந்துத்துவா கொள்கை, சனா தன தர்மம் குறித்து பேசி வரும் மோடி அதன் அடிப்படையில் செயல்படுவது இல்லை. இதற்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும். மோடி தோல்வி பயத்தால் தான் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு தியானம் செய்ய வருகிறார்.


பாஜக அயோத்தி கோயிலையும், இந்து மதத்தின் சனாதன தர்மத்தையும் முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று வந்தார்கள். மோடி அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் நுழைந்ததை தொடர்ந்து பாஜகவின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment