கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 30 May 2024

கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி


கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா   பேச்சுப்போட்டி


  சுயமரியாதை இயக்க நூற்றூண்டு விழா பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான  மாபெரும் பேச்சு போட்டி குமரிமாவட்டம் செண்பகராமன் புதூரில் எம்.இ.டி. பொறியியல்  கல்லூரியில் வைத்து "பெரியாரும் பெண்ணுரிமையும், பெரியார் ஒரு தொலைநோக்காளர் பெரியார் அறிவியல் பார்வையும் அணுகுமுறையும் ஆகிய தலைப்புகளில் நடத்தப்பட்டது. கல்லூரி செயல் அதிகாரி கோ.மகாதேவன் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு  கழக மாவட்டத் தலைவர்  மா.மு.சுப்பிரமணியம்; திராவிடர்கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கழக குமரிமாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர்.  கல்லூரி முதல்வர்எழில் தினேகா கல்வியியல் கல்லூரி முதல்வர் சிறீலதா ஆகியோர்  போட்டியினை ஒருங்கிணைத்தனர். 170க்கும் அதிகமான மாணவ,மாணவியர்கள் இந்த பேச்சுப்போட்டியில் பங்கேற்றனர். பங்கேற்று பெரியாருடைய வரலாறு குறித்து பேசினர். இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment