தமிழகத்தில் தெளிவான வானிலை. சிறப்பான இடிமழைக்கு தயார் ஆகிறது தமிழகம்.
மன்னார் வளைகுடா அருகே நிலவி வரும் காற்று சுழற்சி காரணமாக இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கருர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுகோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரிரு பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் இடிமழைக்கு வாய்ப்பு உள்ளது.
காற்று சுழற்சி அதே இடத்தில் நீடிக்கும் என்பதால் மேலும் 3, 4 நாட்களுக்கு தமிழகத்தில் இதே வானிலை தான் நிலவும்.

No comments:
Post a Comment