கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பூவாங்க பறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கொடைவிழா-சிறப்பு பட்டிமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 11 May 2024

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பூவாங்க பறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில் கொடைவிழா-சிறப்பு பட்டிமன்றத்தில் விஜய் வசந்த் எம்.பி பேச்சு

 


கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம்  பூவாங்க பறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்  கொடைவிழா-சிறப்பு பட்டிமன்றத்தில்  விஜய் வசந்த் எம்.பி பேச்சு


கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம்  பூவாங்க பறம்பு ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவில்  கொடைவிழா மற்றும் முப்பெரும் விழா கடந்த 04-05-2024 முதல் 08-05-2022 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜை, ஆராதனை, அபிஷேகம் ,விளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது .


2-ம் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற  சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்,


விஜய்வசந்த் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பொன்னாடை போர்த்தி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.   சாமுண்டீஸ்வரி அம்மன் அறக்கட்டளை சார்பில்  2 - ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் பரிசு வழங்கி பேசியதாவது :இங்கு நடைபெறுகின்ற சிறப்பு பட்டிமன்றத்தில் பிள்ளைகளின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு  தாய் முக்கியமாக , தந்தை முக்கியமா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என கேட்பது உண்டு,  இரண்டு பேருமே முக்கியம்தான் அம்மா அப்பா என பிரிக்க முடியாது,  பிள்ளைகளை சீர்படுத்தி வளர வைப்பதில் முக்கிய பங்கு தந்தைக்கும் உண்டு , என்னை பொருத்தமட்டில் சமுதாயத்தில் ஒரு பிள்ளையை வளர்த்து ஆளாக்கியதில் தாய்க்கும் , தந்தைக்கும் சம பங்கு உண்டு என்னுடைய தந்தை வேலை என பிசியாக இருப்பார், அப்போது நான்,  தம்பி, அக்கா என அனைவரையும் அம்மா பார்த்துக் கொள்வார்.ஆனால் எங்களை வளர்த்து ஆளாக்கியதில் முழு பங்கு எனது தந்தைக்கு உண்டு, அவருடைய கடின உழைப்பு இன்று எங்களை சமுதாயத்தில் உயர்த்தி உள்ளது.   குழந்தை அழுதால் தாய் குழந்தையை தோளில் தூக்கி போட்டு முதுகில் தட்டி கொடுத்து வளர்ப்பார்கள் , ஆனால் இன்று மொபைல் போனை கையில் கொடுத்து விடுகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள உறவு துண்டிக்கப்பட்டு விடுகிறது. ,குழந்தைகள் தவறு செய்தால் ஆசிரியர்கள் கண்டிப்பது வழக்கம் ஆனால் இன்று ஆசிரியர்களை கண்டிக்கும் நிலைமை வந்துவிட்டது .பெற்றோர்கள் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருங்கள் என்னைப் பொருத்தமட்டில் அம்மாவும் , அப்பாவும் முக்கியம் தான் ,  பேச்சுக்காக அம்மா முக்கியமா,  அப்பா முக்கியமா என கேட்கலாம் ஆனால் இருவரும் முக்கியமே இவ்வாறு அவர் பேசினார் . நிகழ்ச்சியில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி  தலைவர் ஜெபா, திமுக நிர்வாகி சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment