கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த இடத்தில் இன்னொரு குழுவினர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குமரி ஆட்டோ ஓட்டுநர்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 26 June 2024

கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த இடத்தில் இன்னொரு குழுவினர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்.


கன்னியாகுமரியில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் 35 ஆண்டுகளாக ஆட்டோ நிறுத்த நிலையம் இருந்த இடத்தில் இன்னொரு குழுவினர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு... காவல் நிலையத்தை முற்றுகையிட்ட குமரி ஆட்டோ ஓட்டுநர்கள்.


சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 350-க்கு மேற்பட்ட ஆட்டோக்கள் உள்ளன. கன்னியாகுமரி காவல் நிலையம் முன்பு 35 வருடங்களுக்கு மேலாக அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்   செயல்பட்டு வருகிறது.


இந்நிலையில் அந்த நிலையத்தை ஆக்கிரமித்து இன்னொரு குழுவினர் அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் அமைக்க ஒரு தரப்பினர் முற்பட்டனர். மேலும் அங்கு ஏற்கனவே இயங்கி வந்த அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை புதிதாக ஆட்டோ ஓட்டுனர் சங்கம் ஏற்படுத்த முயன்ற நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.  இரவு கன்னியாகுமரி காவல் நிலையத்தை அனைத்து ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுநர்களுடன் கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர்.நெப்போலியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அண்ணா தொழிற்சங்க பெயர் பலகையை  சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment