பல்வேறு சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்த கைரேகை பிரிவு நிபுணர்களை பாராட்டி சான்றிதழ் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 June 2024

பல்வேறு சிக்கலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருந்த கைரேகை பிரிவு நிபுணர்களை பாராட்டி சான்றிதழ்


 பல்வேறு சிக்கலான   வழக்குகளில் குற்றவாளிகளை  கண்டுபிடிக்க உதவியாக இருந்த கைரேகை பிரிவு நிபுணர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்


குமரி மாவட்டத்தில் கொலை , கொள்ளை,திருட்டு சம்பவங்களை தடுப்பதிலும், ஏற்கனவே நடந்த  சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதிலும்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில்  கோட்டார், வடசேரி, தக்கலை என மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சிக்கலான குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கு  உதவி செய்து சிறந்த முறையில் செயல்பட்ட கைரேகை பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் திரு. R.S.ரெத்ன சேகர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு.ஜவஹர்லால், திருமதி.வினிதா, திருமதி.அமலா, தலைமைக்காவலர் திரு.கதிரேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்கள் வெகுவாக பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள். தொடர்ந்து சிறப்பாக செயல்பட அறிவுரை வழங்கினார்.

No comments:

Post a Comment