நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் பாதாளசாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க குமரிமாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் வலியுறுத்தல். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் பாதாளசாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க குமரிமாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் வலியுறுத்தல்.

 


நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் நடந்துவரும் பாதாளசாக்கடை பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க குமரிமாவட்ட திராவிடர்கழக செயலாளர் கோ. வெற்றிவேந்தன் வலியுறுத்தல்.


திராவிடர்கழக மாவட்டச் செயலாளர் கோ வெற்றிவேந்தன் தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகமா மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவதுகடந்த அதிமுக ஆட்சியில் நாகர்கோவில் மாநகர பகுதியில் தொடங்கப்பட்ட பாதாளசாக்கடை  திட்டத்தின் பணிகள் 10ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை முடிந்தபாடில்லை. கழிவுநீர் அகற்றல் கோட்ட நாகர்கோவில் நிர்வாக பொறியாளரிடம் இது தொடர்பாக நாங்கள் பலமுறை எடுத்துக்கூறியும், கடிதங்கள் கொடுத்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் வேகமாக  எடுக்கவில்லை. இந்த திட்டம் வேகமாக நிறைவேற்றப்படாததால் இதற்காக சாலைகளை தோண்டியதால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மக்கள் தினமும் சென்று அவதிப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விபத்து  கூட ஏற்படுகிறது. இந்த திட்டத்துக்காக இதுவரை பல கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது ஆனால் பணிகள் முடியவில்லை.  ஆகவே  துறை உயரதிகாரிகள் இந்த திட்டத்தை உடனடியாக வேகமாக செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment