கொட்டாரத்தில் அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா பி.டி. செல்வகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 30 June 2024

கொட்டாரத்தில் அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா பி.டி. செல்வகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 


கொட்டாரத்தில் அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா  பி.டி. செல்வகுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


கன்னியாகுமரி அருகே உள்ள  கொட்டாரம் பாலகிருஷ்ணன் நகரில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு சங்கம் கை கொடுக்கும் கரங்களின் 4-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று  நடந்தது. விழாவை யொட்டி சிறுவர்-சிறுமிகளுக்கான பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பின்னர் மதியம் சமபந்தி விருந்து நடந்தது. மாலையில்  பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இந்த விழாவில் கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும் திரைப்பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 10-ம்வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் பேச்சுப்போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் சிறுமிகள் மற்றும் பெரியோர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். அதைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை பி.டி. செல்வகுமார் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-


பாட்டாளி மக்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பு. இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணைப்பது இது போன்ற கிராம பகுதியில் உள்ள பாட்டாளி மக்கள்தான். பாட்டாளி மக்கள் சந்தோஷமாக இருந்தால்தான் இந்த நாடும் சிறப்படையும். பாட்டாளி மக்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் இது போன்ற விழாக்கள் எடுப்பது மூலம் இந்த பகுதி மக்கள் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பி.டி. செல்வகுமார் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு ஊர் பொறுப்பாளர் கணபதி தலைமை தாங்கினார். 


இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாநில மகளிர் அணி தலைவி பேராசிரியை ரெங்கநாயகி, மாவட்ட பசுமை படை தலைவர் பேராசிரியர் ராமகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மகளிர் அணி தலைவி வரலட்சுமி, மாவட்ட அமைப்பாளர் அனிதா,மாநில பேச்சாளர் தாணுலிங்கம், கொட்டாரம் பேரூர் தலைவர் ரகுபதி, மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சம்பூர்ண தேவராஜன், மற்றும் ஊர் நிர்வாகிகள் கணேசன், நாராயண பெருமாள் நடராஜன் கனகராஜ் ரதீஷ், அருண் நாராயணன், சுப்பம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

No comments:

Post a Comment