நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை குடியிருப்பு இல்லாத இடங்களில் வளர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- மாமனற் உறுப்பினர் அக்சயா கண்ணன் மேயரிடம் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 21 June 2024

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை குடியிருப்பு இல்லாத இடங்களில் வளர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- மாமனற் உறுப்பினர் அக்சயா கண்ணன் மேயரிடம் மனு.

 


நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை குடியிருப்பு இல்லாத இடங்களில் வளர்க்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- மாமனற் உறுப்பினர் அக்சயா கண்ணன் மேயரிடம் மனு.


கன்னியாகுமரி நாகர்கோவில் மாநக ராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு அந்த மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மேயர் மகேஷ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார், அப்போது மாமன்ற உறுப்பினரும், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளருமான.
அக்ஷயாகண்ணன் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி யிருப்பதாவது:


நாகர்கோவில் மாநகராட்சி 25 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஒருவர் 100-க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். அந்த மாடுகள் வடிவீஸ்வரம், தோப்புவணிகர் தெரு, மீனாட்சி கார்டன் போன்ற பகுதிகளில் காலை முதல் மாலை வரை தனி தனியாக சுற்றி திரிகிறது. இந்த மாடுகளால் குழந்தைகள், முதியோர்களால் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாமல்
தவிக்கின்றனர். எனவே மாடு, ஆடு வளர்ப்போர் சுகாதார துறை மூலம் அனுமதி பெற்று குடியிருப்பு பகுதிகள் அல்லாத இடங்களில் வளர்க்க மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். என கோரிக்கை மனுவை வழங்கினார்.

No comments:

Post a Comment